‘விழி திற தேடு ‘ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!
தமிழகத்தை உலுக்கிய உண்மையான கொலைச் சம்பவம்' விழி திற தேடு ' என்கிற பெயரில் படமாகிறது.
இப்படத்தை வி. என் .ராஜா சுப்பிரமணியன் தயாரித்து இயக்குகிறார்.
படம் பற்றி இயக்குநர் வி. என். ராஜா சுப்பிரமணியன் பேசும்போது,
"நாட்டில் ஒவ்வொரு குற்றச் செயல் நடக்கும் போது மக்கள் அதை ஒரு புதிரோடுதான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பல சம்பவங்களில் குற்றவாளிகள் பிடிபடுவதில்லை. அப்படிப் பிடிபட்டாலும் தப்பித்து விடுகிறார்கள் . சில நேரம் தப்பிக்க விட்டு விடுகிறார்கள்.இதில் எங்கே பிரச்சினை உள்ளது? காவல்துறை விசாரிக்கும் விதத்திலா? துப்பறியும் கோணத்தில் உள்ள கோளாறா? ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் மோசடிகளா?அல்லது சட்டத்தில் உள்ள ஓட்டைகளா? என்று மக்களிடம் பல்வேறு கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.
எவ்வளவு கிடுக்கிப்பிடி சட்டங்கள் வந்தாலும் அதில் உள்ள இடைவெளி வழியே குற்றவாளிகள் தப்பித்துக் கொள்க...
