Friday, October 23

Tag: fl-of-anbulla-gilli

உதயநிதி வெளியிட்ட “அன்புள்ள கில்லி” ஃபர்ஸ்ட் லுக்!

உதயநிதி வெளியிட்ட “அன்புள்ள கில்லி” ஃபர்ஸ்ட் லுக்!

News
சமீபத்தில் “அன்புள்ள கில்லி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தயாரிப்பாளர், நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. “அன்புள்ள கில்லி” படத்தின் படக்குழு ஃபர்ஸ்ட் லுக்குக்கு கிடைத்த மிகப்பெரிய வரவேற்பில் மகிழ்ச்சியின் உச்சத்தில் மிதந்து வருகின்றனர். இது குறித்து இயக்குநர் ராமலிங்கம் ஶ்ரீநாத் கூறியதாவது... “அன்புள்ள கில்லி” படத்தில் பணிபுரிந்திருக்கும் அனைவரின் சுய வாழ்வும் ஒரு வகையில் இப்படத்தில் பிரதிபலித்திருக்கிறது. ஏனெனில் அனைவருமே செல்லப்பிராணி வளர்ப்பவர்கள். ஒரு வகையில் அவர்களின் வாழ்வு தான் இந்தக்கதை. ஃபர்ஸ்ட் லுக் வெளிடுவது குறித்து வரும்போது எங்களுக்கு கிடைத்த இன்ப அதிர்ச்சி அதனை வெளியிட்ட திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களும் செல்லப்பிராணி வளர்ப்பவர் என்பது தான். அவர் மட்டுமல்ல அவர் வீட்டில் அனைவருமே செல்லப்பிராணி மீது...