‘வேட்டை நாய்’ படத்தில் அனிருத் பாடியுள்ள தர லோக்கல் பாடல்!
ஆர்.கே .சுரேஷ் கதாநாயகனாக நடிக்கும் படம் 'வேட்டை நாய்'. இப்படத்தை ஜெய்சங்கர் இயக்கி இருக்கிறார் . ராம்கி, சுபிக்ஷா நடித்துள்ளனர். கணேஷ் சந்திரசேகரன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் இரண்டு மெலடி பாடல்களும் ஒரு குத்துப் பாடலும் உள்ளன. தர லோக்கலாக உள்ள அதிரடி குத்துப் பாடலை அனிருத் பாடியிருக்கிறார்.ஆலுமா டோலுமா போல் இந்த பாடல் பட்டைய கிளப்பும் என்று கூறுகிறார் இசையமைப்பாளர் கணேஷ் சந்திரசேகரன்.
'எழுமின்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் , அந்தப் படத்திற்காகத் தனுஷையும் அனிருத்தையும் பாடவைத்தார். அந்தப் பாடல்கள் மில்லியன் கணக்கில் ஹிட்சை அள்ளின. இவர் இரண்டாவது படமாக இசையமைக்கும் 'வேட்டைநாய்' படத்தில் இவரது இசையில் அனிருத் ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.
அதுபற்றிய
அனுபவங்களை கூறும்போது,
"நான் முதலில் ' எழுமின்' படத்...

