சோனி லிவ் OTT தளத்தில் வெளியாகும் ‘தேன்’!
சோனி லிவ் OTT தளத்தில் வெளியாகும் 'தேன்'!
இந்திய கலாச்சாரத்திற்கும், பண்பாட்டிற்கும் தொடர்புடைய கதைகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பது தான் சோனி லிவ்வின் தலையாய முயற்சியாகும்.
இதன் தொடர்ச்சியாக தற்போது சோனி லிவ் OTT தளத்தில், சமூகத்தின் யதார்த்தங்களை எடுத்துக்காட்டுகின்ற கதையான விருது பெற்ற திரைப்படமான ‘தேன் ’ 25 ஜூன் அன்று வெளியாக இருக்கிறது.
ஒரு இளம், கிராமப்புற மற்றும் படிக்காத தேனீ வளர்ப்பவரின் பயணத்தை இந்த படம் காட்டுகிறது. அவர் தனது மனைவியை ஒரு அரிய நோயிலிருந்து காப்பாற்ற பல சவால்களை எதிர்த்துப் போராடுகிறார்.
வேலு (தருண் குமார்) மற்றும் பூங்கோடி (அபர்நதி) ஆகியோரின் வாழ்க்கையை சுற்றி அமைந்தது தான் தேன் படத்தின் மைய கதை. துரதிர்ஷ்டவசமாக பூங்கோடி நோய்வாய்ப்பட்டு உயிருக்கு போராடுகிறார். குடியுரிமையை நிரூபிப்பதற்கான சரியான ஆவணங்கள் இல்லாததால் பூங்கோடிக்கு மருத்துவ உதவியைப் பெற வேலு ...
