இயக்குநர் கணேஷ் K பாபு திரைக்கதையில் உருவாகும் “ரேவன்”!
டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு திரைக்கதையில் உருவாகும் புதிய திரைப்படம் “ரேவன்”!
MG STUDIOS சார்பில் தயாரிப்பாளர் APV. மாறன் உடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் K ஜெகன் இயக்கத்தில், அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகும் “ரேவன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு, இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள, எளிமையான பூஜையுடன் இனிதே துவங்கியது.
தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, S. S. லலித் குமார், ஃபைவ் ஸ்டார் கதிரேசன், ஃபைவ் ஸ்டார் செந்தில்,
ராக்ஃபோர்ட் என்ட்டெயின்மென்ட் முருகானந்தம், அருண் விஷ்வா, விநியோகஸ்தர் கோவை அரவிந்த் மற்றும் போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா, யாத்திசை இயக்குநர் தரணி ராஜேந்திரன், குட்நைட் இயக்குநர் விநாயக் சந்திரசேகரன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
மாறுபட்ட களத்தில் புதுமுகங்களின் தற்கால நவீ...
