3 வருட கடின உழைப்பால் உருவான ‘கங்குவா’
தமிழின் முதல் Pan Indian பிரம்மாண்டம் “கங்குவா” !
இந்தியாவெங்கும் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும், முன்னணி நட்சத்திர நடிகர் சூர்யா நடிப்பில், ஸ்டுடியோ க்ரீன், ஞானவேல்ராஜா தயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம், நவம்பர் 14ஆம் தேதி நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ் திரையுலகில் இதுவரை இல்லாத வகையில் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகியிருக்கும் இப்படத்தில், திரை ரசிகர்களுக்கு பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது.
“எதற்கும் துணிந்தவன்” படத்திற்குப் பிறகு திரையரங்குகளில் சூரியாவை நேரில் தரிசிக்கவுள்ள ரசிகர்களுக்கு, மிகப் பெரிய விருந்து காத்திருக்கிறது. இப்படத்தில் இதுவரை வெளியான டீசர், டிரெய்லர்களில் இரண்டு விதமான பாத்திரங்களில் சூர்யா தோற்றம் மிரட்டலாக உள்ளது. முழுக்க ஸ்டைலீஷ் மாடர்ன் சூர்யா, போர் வீரனாகவும் கலக்கும் சூர்யா என இரு கதாப்ப...



