லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகும் ‘கேட்’!
லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகும் ‘கேட்’!
GK சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார்.
கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். கதாநாயகியாக மெக்சிகோவை சேர்ந்த நடிகை ' ரி ' என்பவர் நடிக்க இருக்கிறார். இவர் ஏற்கனவே காஞ்சனா 3 படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தவர். மேலும் இவர் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.
மாநகரம் படத்தில் வில்லனாக மிரட்டிய ரவி வெங்கட்ராமன் மற்றும் நடிகை அம்மு ராமச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். மேலும் இந்திய அளவில் சிறந்த மாடல்கள் முக்கிய வேடங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டுள்...
