Monday, September 28

Tag: gate

லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’..!

லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’..!

News
ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றவர். 2018 ஆம் ஆண்டு தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான 'பானு ஸ்ரீ ரெட்டி' இந்த படத்தின் நாயகியாக நடித்திருக்கிறார். இவர் தெலுங்கில் 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். மாநகரம் படத்தில் வில்லனாக மிரட்டிய ரவி வெங்கட்ராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்திய அளவில் சிறந்த மாடல்கள் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஆதி நடிக்கும் 'பாட்னர்' படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய ஷபீர் அஹமது இந்தப்பட...