‘லிப்ட்’ படத்திற்காக கதாபாத்திரமாகவே மாறிய காயத்ரி ரெட்டி!
ஈகா எண்டெர்டெயின்மெண்ட் சார்பாக ஹேப்ஸி தயாரிப்பில் கவின் நடிக்கும் படம் லிப்ட். இப்படத்தின் டப்பிங் உள்பட போஸ்ட் புரொடக்சன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ஓர் முக்கிய அங்கமாக இணைந்திருக்கிறார் நடிகை காயத்ரி ரெட்டி. படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில் அவர் நடித்துள்ளார். இவர் பிகில் படத்தில் சிங்கப்பெண்களில் ஒருவராக நடித்திருந்தார். பிகில் படம் இவருக்கு நல்ல அடையாளத்தைத் தந்ததைத் தொடர்ந்து தற்போது லிப்ட் படம் தனக்கு வேறொரு சிறந்த பரிணாமத்தைத் தரும் என்று நம்புகிறார். பிக்பாஸில் இருந்து வெளிவந்த பின் கவின் ஹீரோவாக நடித்திருக்கும் படம் லிப்ட் . படத்தின் கதையம்சம் திரில்லர் வகையைச் சேர்ந்தது. இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் வினித் வரபிரசாத்.
இப்படத்தைப் பற்றி காயத்ரி ரெட்டி கூறும்போது,
"இந்தப்படத்தின் புரொடக்சன் டீமில் இருந்து ...
