ஜென்டில்மேன்-2′ முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு!
'ஜென்டில்மேன்-2' ல் ஐம்பதுக்கும் மேற்பட்ட நட்சத்திர பட்டாளம்_
முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!
மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் 'ஜென்டில்மேன்-2'.
A.கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில்,
சேத்தன் கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா சக்ரவர்த்தி , பிரியா லால் ஆகியோர் கதா நாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்று புறங்களில் பதினைந்து நாட்கள் நடைபெற்று நிறைவுற்றது. இதில், சேத்தன், நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால், படவா கோபி, சுதா ராணி, சித்தாரா, ஶ்ரீ லதா, கண்மணி, ' லொள்ளு சபா ' சாமிநாதன், பேபி பத்ம ராகா மற்றும் முல்லை - கோதண்டம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் படத்தின் முக்கியமான ஒரு சண்டை காட்சியும் படமாக்கப்பட்டது. ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் கா...







