ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் “ஹீரோ“ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் C வில்லியம்ஸ் !
George C Williams
மிக குறுகிய காலத்தில் தமிழ் சினிமா ஒளிப்பதிவு தளத்தில் மிகவும் பிரபலமான ஒருவராக மாறியிருக்கிறார் ஜார்ஜ் C வில்லியம்ஸ். கதையின் மையத்தோடு இணைந்து திரையில் அவர் எழுதும் ஒளிக்கவிதைகள் இந்தியா முழுதும் கவனிக்கப்பட்டு பாரட்டுபெற்று வருகிறது. அவரது ஒளிப்பதிவில் விரைவில் வெளியாகவுள்ள “ஹீரோ” திரைப்படம் சிவகார்த்திகேயன், அர்ஜீன், அபய் தியோல், கல்யாணி ப்ரியதர்ஷன் எனும் நட்சத்திர பட்டாளங்களின் நடிப்பில் பெரும் எதிர்ப்பார்புக்குள்ளாகியுள்ளது.
“ஹீரோ” படம் குறித்து ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் C வில்லியம்ஸ் பகிர்ந்துகொண்டதாவது...
“ஹீரோ” அதன் முன்னோட்டத்தில் சொல்லப்பட்டிருப்பது போலவே நாட்டில் நிலவும் மிக முக்கியமான பிரச்சனையை எல்லோருக்கும் சென்று சேரும் விதத்தில் பேசும் படைப்பாக இருக்கும். தயாரிப்பாளர் கொட்டாப்பாடி J ராஜேஷ் இல்லையென்றால் இது எதுவுமே சாத்தியமாக...

