GHOSTBUSTERS: AFTERLIFE (ஆங்கிலம்)
GHOSTBUSTERS: AFTERLIFE (ஆங்கிலம்)
தயாரிப்பு - Sony Pictures
இயக்கம் - Jason Reitman
வெளியீடு - November 19th 2021
முன்னோட்டம்: Jason Reitman இன் நேர்த்தியான இயக்கத்தில் உருவான இப்படம் ஒரு வளமிகு கற்பனைக் கதையம்சம் கொண்ட நகைச்சுவை விருந்து. Ghostbusters (1984), Ghostbusters 2 (1989) (இவை இரண்டையும் Jason Reitman இன் தந்தை Ivan Reitman இயக்கியிருந்தார்!) மற்றும் Ghostbusters (2016, Paul Feig) ஆகிய மூன்று Ghostbusters படங்களைத் தொடர்ந்து, அந்த Franchise-இன் அடுத்த பதிப்பாக உருவாக்கப்பட்டுள்ள படமிது! 1989 - படத்தின் தொடர் சங்கிலியாக, அப்பட நிகழ்வுகளை அடுத்து, 30 வருடங்களுக்குப் பின்னர், இப்பட நிகழ்வுகள் நடந்தேறுவதாக, இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.
கதையம்சம்: Ghostbusters என்போர் அமானுஷ்ய சக்திகள் மற்றும் பேய், ஆவி போன்றவை உலவும் இடங்களில், அவற்றை விரட்டி அடிக்கும் வேலையில் ஈடுபடு...
