Wednesday, September 30

Tag: GOOD NIGHT REVIEW

குட் நைட் – திரைப்பட விமர்சனம்

குட் நைட் – திரைப்பட விமர்சனம்

Reviews
மனம் விட்டு இப்படி சிரித்து மகிழ்ந்து ஒரு படத்தைப் பார்த்து எவ்வளவு நாட்களாகி விட்டன. ஐடி நிறுவனமொன்றில் பணியாற்றும் மணிகண்டன் தன் தாய், தங்கை அக்கா ஆகியோருடன் வசித்து வருகிறார். அக்காவுக்கு மணமாகிவிட்டாலும், தன் கணவர் ரமேஷ் திலக்குடன் அம்மா வீட்டிலேயே வசிக்கிறார். மணிகண்டனின் மிகப்பெரிய பிரச்சனையே தூங்கும்போது அவர் விடும் குறட்டை சத்தம்தான். அவர் விடும் குறட்டையின் டெசிபல் சத்தம் பக்கத்து வீடு எதிர்வீடு வரை கேட்கும். மோகன் என்ற பெயர் கொண்ட அவரைஅலுவலக நண்பர்கள் மோட்டார் மோகன் என்று அழைக்கும் அளவுக்கு அவரது குறட்டை பிரபலமாக இருக்கிறது. அலுவலக்த்தில் உடன் பணியாற்றும் தோழியிடம் ப்ரபோஸ் பண்ண நினைக்கும்போது, ஒரு பஸ் பயணத்தில் தூங்கும் மணிகண்டன் விடும் குறட்டையைப் பார்த்து  "ஒரு சின்ன பஸ் பயணத்திலேயே உங்கள் குறட்டையை என்னால் சகிக்க முடியவில்லை, வாழ்க்கை முழுக்க உங்களுடன் சேர்ந்து...