மை கைண்டா ஃபிலிம்ஸ் கோலாகல துவக்கம்!
இயக்குநர் கோபிநாத் நாராயணமூர்த்தியின் புதிய திரைப்பட நிறுவனம் மை கைண்டா ஃபிலிம்ஸ் கோலாகல துவக்கம்!
தமிழில் 'தங்க முட்டை' மற்றும் தெலுங்கில் 'பங்காரு குட்டு' என இருமொழிகளில் வெளிவரவிருக்கும் திரைப்படத்தை எழுதி இயக்கி வரும் கோபிநாத் நாராயணமூர்த்தி மை கைண்டா ஃபிலிம்ஸ் என்று புதிய திரைப்பட நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.
கோபிநாத் நாராயணமூர்த்தியின் தாயார் கே கோதைநாயகி அவர்களின் பிறந்தநாளான மே 16 (வியாழக்கிழமை) அன்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மை கைண்டா ஃபிலிம்ஸ் திரைப்பட நிறுவனத்தை கோபிநாத் நாராயணமூர்த்தியின் குருநாதர்களான இயக்குநர்கள் மிலிந்த் ராவ், ஆர் கண்ணன், இயக்குநர்கள் சங்கத்தின் செயலாளர் பேரரசு மற்றும் பிரபல தொழிலதிபர் நல்லி குப்புசாமி செட்டியார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். புதிய திரைப்பட நிறுவனத்தின் பெயர் பலகையை கோபிநாத் நாராயண மூர்த்தி மற்றும் இணை இயக்குநர் கரிகாலன் பிரபலங்களிடம...
