உலக சாதனை படைத்த மோதிரம் இணையத்தில் ஏலம்!
உலக சாதனை படைத்த மோதிரம் இணையத்தில் ஏலம்!
நவம்பர் 13 முதல் நவம்பர் 22 வரை ஆன்லைனில் ஏலம் விடப்படுகிறது!
சென்னை, 02 நவம்பர் 2020: ஹைதராபாத்தை சேர்ந்த சந்துபாய் (ஹால்மார்க் ஜூவல்லர்ஸ் ஒரு பிரிவு) தி டயமண்ட் ஸ்டோரின் உரிமையாளர் கோட்டி ஸ்ரீகாந்த், கடந்த செப்டம்பர் மாதம் ஒரே மோதிரத்தில் அமைக்கப்பட்ட பெரும்பாலான வைரங்களுக்கான புதிய கின்னஸ் உலக சாதனையை படைத்திருந்தார். கின்னஸ் சாதனை புரிந்த 7,801 இயற்கை வைரங்களைக் கொண்ட மோதிரம் வரும் நவம்பர் 13 முதல் நவம்பர் 22 வரை ஆன்லைனில் ஏலத்தில் விடப்படவுள்ளது. ஏலத்திற்கான பதிவுகள் 2020ம் ஆண்டு நவம்பர் 2ம் தேதி முதல் துவங்குகிறது. இந்த ஏலத்தின் ஆரம்ப விலை ரூபாய் 78,01,000 (104,692 அமெரிக்க டாலர்) என அறிவிக்கப்பட்டுள்ளது.
கின்னஸ் சாதனை மோதிரத்தை உருவாக்கிய திரு கோட்டி ஸ்ரீகாந்த் கூறுகையில், நகைகளில் தனித்துவமான கலை படைப்புகளை உருவாக்குவதற்கான எ...
