குலு குலு – விமர்சனம்
குலு குலு - விமர்சனம்
அமேசான் காடுகளில் பிறந்து, குறைந்த எண்ணிக்கையிலானவர்களே பேசும் ஒரு மொழியை தாய் மொழியாகக் கொண்ட சந்தானம் பதிமூன்று மொழிகளைக் கற்றுத் தேர்ந்து தமிழ்நாடு வருகிறார். நல்ல பழக்கம் என்பதா கெட்ட பழக்கம் என்பதா என்றே சொல்ல முடியாத மாதிரி ஒரு பழக்கம் இவரிடம் இருக்கிறது. அதாவது உதவி என்று யார் என்ன உதவி கேட்டாலும் செய்து, உடம்பைப் புண்ணாக்கிக் கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்யும் பழக்கம்தான் அது.
பசியால் தவித்த பிச்சைக்காரிக்கு சந்தானம் வாங்கித் தந்த உணவை திமிர் பிடித்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலையில் தட்டிவிட்டு வீணாக்கி விடுகிறார். "உனக்கு தைரியம் இருந்தால் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டரை அடி" என்று சொல்லி பிச்சைக்காரி சந்தானத்துக்கு கொம்பு சீவிவிடவே, பலர் பார்க்க இன்ஸ்பெக்டரை அறைகிறார் சந்தானம்.
கடத்தப்பட்ட தங்கள் நண்பனை மீட்பதற்கு இயலாதிருக்கும் நண்பர்கள் மூன்று ப...
