பொழுதுபோக்கு, கல்வி, கார்ப்பரேட் தேவைகளுக்கு ஒரு புதிய வீடியோ ஸ்டுடியோ!
கண்கவர் தொடக்க விழாவின் மூலம் கும்சக் ப்ரைவேட் லிமிடெட்- தனது புதிய வீடியோ ஸ்டுடியோவை திறந்தது. வீடியோ தொழில்மயாக்கல் மற்றும் விநியோகப் பணிகளுக்கு ஸ்டுடியோ உடனடியாகத் தயார் நிலையில் இருக்கிறது.
தரமான முறையில் புதுமையான வகையில் வீடியோ தயாரிப்பு, விநியோகத்துக்கு ஒரே இடத்தில் தீர்வு காண கும்சக் ஒரு சிறந்த தளமாக இருக்கும்.
பொழுதுபோக்கு, கல்வி, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் வீடியோ தேவைகளுக்கு கும்சக்கை அணுகலாம்.
இது குறித்து கும்சக் ப்ரைவேட் லிமிடெட்டின் தலைவர் கோபி கிருஷ்ணன் கூறுகையில், "இல்லந்தோறும் ஒலிந்திருக்கும் புத்தாக்க சிந்தனைகளுக்கு புத்துயிர் பாய்ச்சி வெளிக்கொணரும் நோக்கத்தில் நாங்கள் கும்சக்கை தொடங்கியுள்ளோம். அதுவும் அனைவருக்கும் அடக்கமான செலவில் சிறந்த சேவை வழங்கக் காத்திருக்கிறோம். எங்களின் வாயிலை நோக்கி வரும் திறமைக்கு எங்கள் குழுவில் இருக்கும் ஊடக உலகில் அனுபவம் ...
