சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் படம் ‘பாட்டல் ராதா’!
'பாட்டல் ராதா" திரைப்படம் உங்களை மகிழ்விப்பதோடு சிந்திக்கவும் வைக்கும்.-இயக்குனர் வெற்றிமாறன்!
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் பலூன் பிக்சர்ஸ் அருண்பாலாஜி தயாரிப்பில் அறிமுக இயக்குனர் தினகரன் சிவலிங்கம் இயக்கியிருக்கும் படம் பாட்டல் ராதா.
ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.
குருசோமசுந்தரம், சஞ்சனா, ஜான்விஜய், மாறன், மற்றும் பலர் நடித்திருக்கும் படத்தின் டிரெய்லர் வெளியீட்டுவிழா சென்னையில் நடைபெற்றது விழாவில் படக்குழுவினரோடு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் வெற்றிமாறன், லிங்குசாமி, அமீர், மிஸ்கின் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய லிங்குசாமி இந்த படம் தமிழில் மிகச்சிறந்தபடமாக இந்த காலகட்டத்திற்கு தேவையான ஒருபடமாக வந்திருக்கிறது. ஜனரஞ்சகமாக அதேசமயம் கருத்துள்ள படமாக இருக்கிறது.
இந்தப்படம் அரசாங்கத்திற்கு போடும் மனு போல . அவசியமானதொரு படம்.
இந்தப்படம் பெரும்வெற்றிய...






