Friday, October 23

Tag: GV Prakash-Bharathiraja-Ivana

ஜிவி பிரகாஷ்- பாரதிராஜா- இவானா நடிக்கும் ‘கள்வன்!’

ஜிவி பிரகாஷ்- பாரதிராஜா- இவானா நடிக்கும் ‘கள்வன்!’

News
ஆக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி G. தில்லி பாபு தயாரிப்பில் கமர்ஷியல் வெற்றிப் பெறக்கூடிய எதிர்ப்பார்ப்பில் உள்ள புதிய திரைப்படத்திற்கு 'கள்வன்' எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷ், மூத்த பட இயக்குநரான பாரதிராஜா மற்றும் இவானா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். பாலா இயக்கத்தில் வெளியான 'நாச்சியார்' படத்தில் ஒன்றாக இணைந்து நடித்ததற்கு பிறகு ஜிவி பிரகாஷ் மற்றும் இவானா இந்தப் படத்தில் நடிக்கின்றனர். காமெடி அட்வென்சர் ட்ராமாவாக உருவாகி வரும் இந்தப் படத்தில் பல த்ரில்லர் தருணங்கள் உள்ளன. PV சங்கர் 'கள்வன்' படத்தை இயக்குவது மட்டுமல்லாமல் ஒளிப்பதிவையும் கையாண்டுள்ளார். இதுமட்டுமல்லாமல், ரமேஷ் அய்யப்பனுடன் இணைந்து கதை திரைக்கதையும் எழுதியுள்ளார். இவர்கள் இருவரும் ராஜேஷ் கண்ணாவுடன் இணைந்து படத்திற்கான வசனத்தையும் எழுதியுள்ளனர். ஜிவி பிரகாஷ், பாரதிராஜா மற்றும் இவானா இவர்...