
கலைப்புலி தாணுவின் துப்பாக்கி முனை
தனித்துவம் மிக்க தயாரிப்பாளர் தாணு, கலைப்புலி சார்பில் தயாரிக்கும் படங்களை விளம்பரம் செய்வதில் விற்பன்னர் என்றால் மிகையாகாது. தரமான படங்களைத் தருவதையே தாரக மந்திரமாக் கொண்ட தாணுவின் விளம்பர சாதனைகளை முறியடிக்க அவரால் மட்டுமே முடியும்.
60 வயது மாநிறம் படத்தின் மூலம் ரசிகர்களின் பாரட்டுக்களை அள்ளிக் குவித்த தாணுவின் அடுத்த தயாரிப்பான துப்பாக்கி முனை இம்மாதம் 14ந்தேதி உலகெங்கும் வெளியாகிறது.
விக்ரம் பிரபு ஹன்ஸிகா நடித்திருக்கும் இப்படத்துக்கு ராசமதி ஒளிப்பதிவு செய்ய, முத்து கணேஷ் இசையமைத்திருக்கிறார்.
டி.பார்த்திபன் ஏ.கே.நடராஜ் இணை தயாரிப்பு பொறுப்பேற்று, தாணுவுக்கு தோள் கொடுத்திருக்கின்றனர்....