Friday, October 23

Tag: Happy High Pictures

‘ஓ மை கடவுளே’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

‘ஓ மை கடவுளே’ படப்பிடிப்பு நிறைவடைந்தது!

News
நகைச்சுவை கலந்த காதல் சித்திரமான 'ஓ மை கடவுளே' தென்றல் காற்றைப்போல் மனதுக்கு இதமான அனுபவத்தைத் தரத் தயாராகிறது. அசோக் செல்வன் ரித்விகா சிங் பிரதான வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்தின் டீஸர் வெகுஜன ரசனைக்கேற்ப அமைந்து அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. படத்தின் படப்பிடிப்பு இப்போது முழுமையாக நிறைவடைந்திருக்கிறது. ஆக்ஸஸ் பிலிம்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த தயாரிப்பாளர் டில்லிபாபு இது பற்றி கூறுகையில் "ஓ மை கடவுளே படத்தில் பங்கு பெற்ற துடிப்பு மிக்க இளைஞர் குழு துவக்கத்திலிருந்தே என்னை திருப்திபடுத்தத் தவறவில்லை. இயக்குநர் அஸ்வத்தின் புதுமையான கதை சொல்லும் முறையாகட்டும், அல்லது டீஸரில் தென்பட்ட பிரதான பாத்திரங்களான அசோக் செல்வன், ரித்விகா சிங் மற்றும் வாணி போஜனின் நளினமானமாகட்டும் அனைத்தும் நேர்மறையாகவே அமைந்திருக்கின்றன. ஒன்றை மட்டும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ...
அசோக் செல்வன் ரித்விகா சிங் இணையும் ஓ மை கடவுளே!

அசோக் செல்வன் ரித்விகா சிங் இணையும் ஓ மை கடவுளே!

News
'ஓ மை கடவுளே' என்பது சினிமா ரசிகர்களிடையே நன்கு பிரபலமான வாசகம். வெற்றிப்படமொன்றின் பாடலுக்கு இடையே வரும் இந்த வசனம் இப்போதும் பல சந்தர்பங்களிலும், பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது ஓ மை கடவுளே என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருகிறது. அழகு நாயகன் அசோக் செல்வனும் ரித்விகா சிங்கும் பிரதான வேடங்களில் நடிக்கும் இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அஸ்வத் மாரிமுத்து இயக்குகிறார். நாளைய இயக்குநர் போட்டியின் இறுதிச் சுற்றுவரை வந்தவர் இவர் என்பது குறிப்படத்தக்கது. அசோக் செல்வனும் அபிநயா செல்வமும் இணைந்து துவக்கியிருக்கும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ், இப்படத்தை ஆக்ஸஸ் பிலிம் ஃபாக்டரி ஜி.டில்லிபாபுவுடன் சேர்ந்து தயாரிக்கிறது. மணமக்கள் கோலத்தில் அசோக் செல்வனும் ரித்விகா சிங்கும் சாதரண கண்ணாடி டம்ளரில் டீ சாப்பிடுவதுபோல் வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரே, ரசிகர்களிடம் படம் குறித்...