Wednesday, January 22

Tag: Harish Kalyan

‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்!

‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்!

News
பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் இம்மாதம் 20ந்தேதி வெளியாகும் ‘லப்பர் பந்து’ குறித்து சிலாகிக்கும் ஹரிஷ் கல்யாண்! சினிமாவில் நாளுக்கு நாள் எத்தனையோ பேர் ஹீரோவாக அறிமுகமாகிறார்கள்.. ஆனால் கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தி, சரியான பாதையைத் தேர்ந்தெடுத்து அதில் பயணித்து தங்களுக்கென ஒரு நிலையான இடத்தை உருவாக்கிக் கொள்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த வெகு சிலரில் ஒருவர் நடிகர் ஹரிஷ் கல்யாண்.. கடந்த சில வருடங்களில் அவர் நடித்த படங்களின் கதைத் தேர்வு, நாளுக்கு நாள் மெருகேறும் அவரது நடிப்பு ஆகியவற்றைக் கவனித்துப் பார்த்தால் சினிமாவை அவர் எவ்வளவு கவனமாக அணுகுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். குறிப்பாக 'பார்க்கிங்' படத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் ஹரிஷ் கல்யாண்.. மீண்டும் அப்படி ஒரு அசத்தலான கதையம்சத்துடன் தற்போது உருவாகியுள்ள ‘லப்பர் பந்து’ படத்தில் இதுவரை...
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், டிசம்பர் 30 முதல் ‘பார்க்கிங்’ திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது!

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், டிசம்பர் 30 முதல் ‘பார்க்கிங்’ திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது!

News
டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளத்தில், டிசம்பர் 30 முதல் 'பார்க்கிங்' திரைப்படம் ஸ்ட்ரீம் செய்யப்படவுள்ளது! இந்த ஆண்டின் இறுதிக் கொண்டாட்டங்களை இனிமையாக்கும் வகையில், இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணனின் அதிரடி டிராமா திரைப்படமான 'பார்க்கிங்' திரைப்படத்தை டிசம்பர் 30 முதல் ஸ்ட்ரீம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், இந்துஜா மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் முன்னணி பாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், தங்கள் வீட்டின் முன் வாகனம் நிறுத்தும் இடத்திற்காக சண்டையிட்டுக்கொள்ளும் இரண்டு மனிதர்களைச் சுற்றி நிகழும், ஒரு இறுக்கமான, மிக யதார்த்தமான கதையைச் சொல்கிறது. ஒரு அழுத்தமான கதையை பொழுதுபோக்கு வகையில் அழகாக சொல்லியுள்ள இந்தப் படம், பார்வையாளர்கள் தங்கள் வாழ்வில் நிச்சயம் சந்தித்திருக்கும் இதே போன்ற நிகழ்வுகளை நினைவுபடுத்தும் வ...
பார்க்கிங்’ திரைப்படத்துக்கு U/A சான்றிதழ்!

பார்க்கிங்’ திரைப்படத்துக்கு U/A சான்றிதழ்!

News
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி வழங்கும் ‘பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1, 2023 அன்று உலகம் முழுவதும் வெளியாக இருக்கும் நிலையில் படம் U/A சான்றிதழைப் பெற்றுள்ளது! ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்படும் த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ’பார்க்கிங்’ யு/ஏ சான்றிதழை வெற்றிகரமாகப் பெற்றுள்ளது என்பதை பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. தனித்துவமான கதைக்களம் மற்றும் சரியான திட்டமிடலுடன் உருவாகியுள்ள இத்திரைப்படத்தில் இந்துஜா, எம்.எஸ்.பாஸ்கர், ராம ராஜேந்திரா, பிரார்த்தனா நாதன், இளவரசு மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ்ஸின் இசை, ஜிஜு சன்னியின் ஒளிப்பதிவு ஆகியவை இந்தப் படத்தை மேலும் ஈர்க்கக்கூடியதாக மாற்றி இருக்கிறது. 'பார்க்கிங்’ திரைப்படம் டிசம்பர் 1, 2023 அன்று உ...

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படப்பிடிப்பு நிறைவு!

News
தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் எம்.தேவராஜுலு வழங்கும், சண்முகம் முத்துசாமி இயக்கத்தில், ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படப்பிடிப்பு முடிவடைந்தது! திறமையான குழுவின் பணி, பிரமாண்டமான தயாரிப்பு மற்றும் படத்தின் கதையை வடிவமைக்கும் ஒரு நிலையான செயல்முறை ஆகியவைதான் ஒரு படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு வழிவகுக்கிறது. இது ‘டீசல்’ படத்தில் நடந்துள்ளது. தேர்ட் ஐ என்டர்டெயின்மென்ட் சார்பில் எம். தேவராஜுலு தயாரித்து, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ஹரிஷ் கல்யாணின் ’டீசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. தீபாவளி வாழ்த்துக்களுடன் படப்பிடிப்பின் போது ஒட்டுமொத்த குழுவினரின் கடின உழைப்பைக் காட்டும் சிறப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. 75+ இடங்களில் 5000+ ஆட்களைக் கொண்டு 100 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. ஹரிஷ் கல்யாணின் கேரியர் கிராஃப் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே...
படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி பிரியாணி விருந்தளித்த ஹரீஷ் கல்யாண்!

படப்பிடிப்பு நிறைவடைந்ததையொட்டி பிரியாணி விருந்தளித்த ஹரீஷ் கல்யாண்!

News
உண்மையான அர்ப்பணிப்பு, கடுமையான உழைப்பு இதனை முன்மாதிரியாக கோண்டு செயல்பட்டு வரும்  ஹரீஷ் கல்யாண், ப்ரியா பவானி சங்கர் நடிக்கும் படத்தின் படக்குழு,  மின்னல் வேகத்தில் படப்பிடிப்பை முடித்திருக்கிறது. மிக விரைவில் இப்படத்தின் பெயரை அறிவிக்கவுள்ளது. முதல் நாள் முதலாக முழுத்திறமையையும், கடுமையான உழைப்பையும் கொட்டி, அனைவரும் ஆச்சர்யப்படும்படி குறைவான காலத்தில் படப்பிப்டிப்பை முடித்து, நேற்று படப்பிடிப்பு நிறைவை கொண்டடியுள்ளது படக்குழு. இந்த கொண்டாட்டத்தை படக்குழு கேக் வெட்டி கொண்டாட, நாயகன் ஹரீஷ் கல்யாண் மொத்த படகுழுவிற்கும் வீட்டில் தயாரான பிரியாணியுடன் விருந்தளித்துள்ளார். இயக்குநர் கார்த்திக் சுந்தர் கூறியதாவது... ஒரு தரமான படம் அது எடுக்கப்படும்போதே அதன் பாதிப்பை சுற்றத்தில் ஏற்படுத்திவிடும் என்பார்கள். எங்களின் படப்பிடிப்பில் அது முற்றிலும் உண்மையானது. படப்டிபிடிப்பு ...
‘பெல்லி சூப்லு’ தெலுங்குப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் இணையும் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்!

‘பெல்லி சூப்லு’ தெலுங்குப் படத்தின் தமிழ்ப் பதிப்பில் இணையும் ஹரீஷ் கல்யாண்-பிரியா பவானி சங்கர்!

News
மிகத் தகுதியான பிரம்மச்சாரி என்றஅடைமொழிக்கு மிகப் பொருத்தமான ஹரீஷ் கல்யாண், தற்போது திருமண விளையாட்டில் தள்ளப்படும் பொறியியல் பட்டதாரி வேடத்தில் ஒரு படத்தில் நடிக்கவிருக்கிறார். நிச்சயிக்கப்பட்ட திருமணங்களில், முக்கிய பங்கு வகிக்கும், வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும் வைபவத்தை கதைக் களமாகக் கொண்ட படமொன்றில் பிரியா பவானி சங்கருக்கு ஜோடியாக நடிக்கிறார் அழகு நாயகன் ஹரீஷ் கல்யாண். விஜய் தேவரகொண்டா, ரித்து வர்மா ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற 'பெல்லி சூப்லு' தெலுங்குப் படத்தின் அதிகாரபூர்வ தமிழ்ப் பதிப்பில் ஜோடியாக நடிக்கின்றனர் ஹரீஷ் கல்யாண் பிரியா-பவானி சங்கர். ஏ.எல்.விஜயிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் சுந்தர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சம்பிரதாயமான பூஜையுடன் சென்னையில் இன்று (டிசம்பர் 11) இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமானது. துவக்க விழா பூஜையி...