ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ’பார்க்கிங்’!
சோல்ஜர்ஸ் ஃபேக்டரி & பேஷன் ஸ்டுடியோஸ் வழங்கும், இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ’பார்க்கிங்’
குடும்ப பார்வையாளர்கள் மற்றும் இளைஞர்களின் மிகவும் விரும்பப்படும் நடிகராக மாறியுள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண், தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து தொடர்ந்து நடித்து வருகிறார். அவரது அடுத்து வரவிருக்கும் திரைப்படங்கள் மிகவும் நம்பிக்கைக்குரியதாக இருந்தாலும், ’பார்க்கிங்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே சினிமா மற்றும் வர்த்தக வட்டாரத்தில் நேர்மறையான பேச்சை உருவாக்கியுள்ளது. திட்டமிட்டபடி கச்சிதமாக உருவாகி வரும் இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.
திரில்லர் ட்ராமாவான ’பார்க்கிங்’ திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் சோல்ஜர்ஸ் ஃபேக்டரி கே.எஸ்.சினிஷ் (’பலூன்’ பட இயக்குநர் மற்றும் தெலுங்கி...
