“எனக்காக கேக் வெட்டாதீர்கள்; அந்தப் பணத்தில் கிணறு வெட்டுங்கள்” – கமல்ஹாசன்
எனக்காக கேக் வெட்டாதீர்கள்; அந்தப் பணத்தில் கிணறு வெட்டுங்கள்!
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் பேச்சு.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனின் 67வது பிறந்தநாளையொட்டி கட்சியின் உறுப்பினர்களோடு காணொளி வாயிலாக உரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது,
நான் ஏற்கனவே கட்சி நிர்வாகிகள் மீட்டிங்கில் சொன்னதைத்தான் இப்போதுதான் சொல்கிறேன் ‘எனக்காக கேக் வெட்டாதீர்கள்; கிணறு வெட்டுங்கள்’ என்று. இன்றும் அதைத்தான் என் பிறந்தநாள் செய்தியாகச் சொல்கிறேன். முடிந்தவரை சேவை செய்யுங்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவுங்கள். நீங்கள் பத்திரமாக இருங்கள். ஆரோக்கியம் பேணுங்கள். மற்றவர்களின் ஆரோக்கியத்திற்கும் வழிகாணுங்கள். இம்முறை பரவலாக நடைபெறும் நற்பணிகள் எல்லாருக்கும் நல்ல முன்னுதாரணமாக அமையட்டும் என்றார்.
தொடர்ந்து, கோயம்புத்தூர் ராஜவீதி துணி வணிகர் சங்க அரசு மேல்நிலைப்பள்ள...
