‘ஹார்ட் பீட் சீசன் 2’ வெப் சீரிஸ் மே 22 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகோகிறது!
மிகவும் எதிர்பார்க்கப்படும் 'ஹார்ட் பீட் சீசன் 2' வெப் சீரிஸ் மே 22 அன்று ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகிறது!*
சென்னை, மே 13, 2025: ’ஹார்ட் பீட்’ வெப்சீரிஸில் தேஜூ மற்றும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தில் பிரேக்அவுட் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை யோகலட்சுமி, ’ஹார்ட் பீட்’ சீசன் 2 வெப்சீரிஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெளியீட்டு தேதியை தற்செயலாக வெளியிட்டுள்ளார். ஜியோஹாட்ஸ்டாரால் நடத்தப்பட்ட ரசிகர்கள் உரையாடலின் போது வெளியீட்டுத் தேதியை யோகலட்சுமி தெரியப்படுத்தியது ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீசன் 2 டீசர் வெளியீட்டைக் கொண்டாடும் விதமாகவும், படக்குழுவினருடனான உரையாடலாகவும் இருக்கும்படியாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. அதில் யோகலட்சுமி வெளியீட்டு தேதியை மே 22 என்று குறிப்பிட்டபோது ரசிகர்கள் மற்றும் டிஜிட்டல் ஊடகங்களில் இந்த செய்தி வைரலானது. இதனை உறுதிப்பட...
