“பெரிய நடிகர்கள் சினிமாவை வாழ வைக்க மாட்டார்கள்” – கே. ராஜன் பேச்சு!
சிறுவன் யோகேஸ்வரன் பாடி நடித்து உருவாகியுள்ள 'ஹே சகோ ' இசை ஆல்பம் வெளியீட்டு விழா! இயக்குநர்கள் பேரரசு, ராஜுமுருகன் , தயாரிப்பாளர் கே .ராஜன், பின்னணிப் பாடகர் உன்னி கிருஷ்ணன் ஆகியோர் ஆல்பத்தை வெளியிட படக்குழுவினர் பெற்றுக் கொண்டனர்!
இந்த ஆல்பத்தை ரகுராமன், சங்கீதா தயாரித்துள்ளார்கள். பாடல் எழுதி இசை அமைத்து இயக்கியுள்ளார் ஜெய் க்ருஷ் கதிர்.இவ்விழாவில் இயக்குநர் ராஜுமுருகன் பேசும்போது"இந்தப் பாடலைப் பார்த்த போது ஒரு நேர்நிலையான அதிர்வலைகள் பரவுவதை உணர முடிகிறது. கலை வடிவத்தின் நோக்கம் என்று கூறினால் அந்த வடிவம் ஏதாவது ஒரு வகையில் அன்பையும் மனிதநேயத்தையும் நம்பிக்கையையும் ஓர் அங்குல அளவிலாவது ஏற்படுத்தி உயர்த்த வேண்டும். அந்த வகையில் இந்தப் பாடல் நம்பிக்கையை ஏற்படுத்தும் விதத்தில் உருவாகியுள்ளது.சிறுவன் யோகேஸ்வரன் நன்றாக செய்துள்ளான். நான் இங்கே வந்திருப்பது இதற்கு இசையமைத்துள்ள ஜெய...
