Hi 5 திரைப்பட இசை வெளியீட்டு விழா !
Basket Films & Creations தயாரிப்பில் முழுக்க முழுக்க புதுமுகங்களின் நடிப்பில், இயக்குனர் பாஸ்கி T ராஜ் இயக்கத்தில் உறவுகளின் அருமைகளை கூறும் திரைப்படம் “Hi 5” . விரைவில் திரைக்குவரவுள்ள இப்படத்தின் இசை வெளியீடு படக்குழுவினர் மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
டிரெய்லர் பார்க்கும் போது மிக நீண்ட காலம் கழித்து ஒரு ஆங்கில படம் பார்த்த உணர்வு வருகிறது. கனடாவில் எடுத்துள்ளார்கள். ஒரு நல்ல கருத்தை சொல்ல வந்திருக்கிறார்கள். இந்த படத்தில் வேலை பார்த்த அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். நடிகர்கள் யாரும் புதிய முகங்கள் போல் தெரியவில்லை. நன்றாக நடித்துள்ளனர். இந்தக்குழுவிற்கு மிகப்பெரிய வெற்றி கிடைக்கும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
எழுத்தாளர் அஜயன் பாலா பேசியதாவது…
இந்தப்படம் அன்பைப்பற்றிய படம...
