எதிர்பார்புகளை எகிற வைத்திருக்கும் பொன்மகள் வந்தாள்!
பெரும் எதிர்பார்பிற்குள்ளாகியுள்ள Ponmagal Vandhal திரைப்படத்தை வெளியிட அமேஸான் பிரைம் தயாராகியுள்ளது
பரபரப்பான இந்த சட்ட நாடகம் பிரைம் வீடியோவில் உலகளாவிய அளவில் நேரிடையாக வெளியாகும் முதல் தமிழ்த் திரைப்படமாகும். இது, தவறாக தண்டனை அளிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு நீதியை வழங்கிடப் போராடும் ஒரு நேர்மையான பெண் வழக்கறிஞரின் கதையாகும்
2D எண்டர்டெயின்மெண்டால் தயாரிக்கப்பட்டுள்ள Ponmagal Vandhal திரைப்படத்தில், ஜோதிகா, பார்த்திபன், K.பாக்யராஜ், தியாகராஜன், பிரதாப் போத்தன் மற்றும் பாண்டியராஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
மும்பை, இந்தியா, 28 மே, 2020 - அமேசான் பிரைம் வீடியோ இன்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் நீதிமன்ற நாடகப் படமான Ponmagal Vandhal திரைப்படத்தை மே 29 அன்று வெளியிட தயாராகவுள்ளது. இது, ஒரு நேர்மையான வழக்கறிஞர், தவறாக தண்டிக்கப்பட்ட, ஒரு அப்பாவி பெண்ணை விடுவிக்க முயற்சிக்கும் கதையாக...
