நிஜ பைக் ரேஸ் வீரர்கள் பங்கு பெறும் பரபரப்பான ஆக்ஷன் த்ரில்லராக உருவான “ரேசர்”
நிஜ பைக் ரேஸ் வீரர்களுடன் அகில் சந்தோஷ் நடிக்க சதீஷ் (எ) Satz Rex இயக்கும் படம் "ரேசர்"
ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட் (Hustlers Entertainment) பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட் செலவில் தயாரித்து இருக்கும் படம் "ரேசர்".
சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி ( ரெடால் மீடியா ஒர்க்ஸ்) இணை தயாரிப்பு செய்திருக்கிறார்.
இப்படத்தை "ஆக்ஷன் ரியாக்ஷன்" வழியாக ஜெனீஷ் வெளியிடுகிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி டைரக்ட் செய்து இருக்கிறார் சதீஷ் (எ) Satz Rex.
பிரபாகர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
பரத் இசை அமைத்திருக்கிறார்.
கனியமுதன் அரங்கம் நிர்மாணித்திருக்கிறார்.
சண்டை காட்சிகளை சீனு அமைத்திருக்கிறார்.
இப்படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார் அகில் சந்தோஷ்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கும் லாவண்யா க...
