அதர்வா முரளி – அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்கும் தயாரிப்பு எண் 3.
அதர்வா முரளி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடிக்க, எம்.கே.ஆர்.பி.புரொடக்ஷன் நிறுவனத்துடன் இணைந்து ஆர்.கண்ணன் தயாரித்து இயக்கும் மூன்றாவது படத்தின் படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருக்கிறது. பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக படக்குழு ரஷ்யாவில் உள்ள அஜய்பெர்ஜான் பறக்க இருக்கிறது.
இது குறித்து இயக்குநர் கண்ணன் தெரிவித்ததாவது...
"பழைய மகாபலிபுரம் சாலையில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட வீடு ஒன்றில் படப்பிடிப்பை நடத்தினோம். இதைத் தொடர்ந்து, பதினைந்து நாள் படப்பிடிப்புக்காக ஒட்டு மொத்த படக்குழுவும் அஜய்பெர்ஜான் புறப்பட இருக்கிறது. இத்துடன் படப்பிடிப்பு முழுமையாக முடிந்து விடும். எனக்கும் அதர்வாவுக்கும் இந்தப் படம் முற்றிலும் புதிய அனுபவமாக அமைந்திருக்கிறது. நானும் அதர்வாவும் சமீபகாலமாக ஆக்ஷன் மற்றும் திரில்லர் வகைப் படங்களையே கொடுத்து வந்தோம். நான் படங்களை இயக்க ஆரம்பித்தபோது, காதல் க...
