Friday, November 13

Tag: iamk 2

இருட்டு அறையில் ‘இரண்டாம் குத்து’

இருட்டு அறையில் ‘இரண்டாம் குத்து’

News
அனைத்து தொழிலையும் போல, திரைப்படத் துறை படங்கள் தயாரிப்பது லாபம் பார்க்கத் தான். சில படங்கள் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும், தயாரிப்பாளர்களுக்கு சொற்ப லாபமே கிடைக்கும். விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்ட சில படங்கள் வசூல் ரீதியில் தோல்வியடைந்ததும் உண்டு. ஒரு சில படங்கள் விமர்சன ரீதியாக கொண்டாடப்படவில்லை என்றாலும், வசூலைக் கொட்டிக் கொடுத்துள்ளன. இதற்கு உதாரணம் பல படங்களைச் சொல்லலாம். 2018-ம் ஆண்டு வெளியான 'இருட்டு அறையில் முரட்டுக் குத்து' படம் இந்த வகை தான். திரையரங்கில் இளைஞர்கள் கொண்டாடிய இந்தப் படம் தயாரிப்பாளர் போட்ட முதலீட்டை விட 5 மடங்கு லாபம் சம்பாதித்துக் கொடுத்தது. இப்போது, இதன் 2-ம் பாகத்தை உருவாக்கியுள்ளார் சந்தோஷ் பி.ஜெயக்குமார். இயக்குநராக மட்டுமன்றி, நாயகனாகவும் நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு 'இரண்டாம் குத்து' எனப் பெயரிடப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க இளைஞர்களைக் கவர்வத...