சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துக் கொள்ள விழா குழுவினர் நேரில் அழைப்பு!
இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம், எண்டர்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா ஆகியோர் இணைந்து, வரும் நவம்பர் 20 முதல் 28ம் தேதி வரை கோவாவில் நடத்துகின்ற இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு, (IFFI – International Film Festival of India) தமிழ் திரையுலகையும், பத்திரிக்கையாளர்களையும் நேரில் சந்தித்து அழைப்பு விடுக்கும் விதமாக சென்னையில் இந்த நிகழ்ச்சியை அதன் ஒருங்கிணைப்பாளரும், பிலிம் பெடரேஷன் ஆஃப் இந்தியா மற்றும் தென்னிந்திய திரைப்பட சேம்பர் ஆஃப் காமர்ஸின் செயலாளருமான ரவி கொட்டாரக்கரா ஏற்பாடு செய்திருந்தார்.
இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு இது 50வது ஆண்டு என்பதால், இந்த வருட விழாவை வெகுவிமரிசையாக கொண்டாடுவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் அவர் முன்னெடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு மாநில தலைநகரிலும் இது போன்ற சிறப்பு சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தி, அனைத்து படைப்பாளிகளையும் ஒருங்...
