Friday, October 23

Tag: Ilaiyaraaja

இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் ஷான் ரோல்டன் இணைந்து இசையமைத்துள்ள ‘மார்டன் லவ் சென்னை

இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் ஷான் ரோல்டன் இணைந்து இசையமைத்துள்ள ‘மார்டன் லவ் சென்னை

News
முதன் முறையாக மேஸ்ட்ரோ இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள 'மார்டன் லவ் சென்னை' தொடரின் ஆன்மாவைத் தூண்டும் இசை ஆல்பத்தை, அமேசான் ப்ரைம் வெளியிடுகிறது ஒன்றுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இணையும் இந்த ஆல்பத்தில் மேஸ்ட்ரோ இளையராஜா, யுக பாரதி மற்றும் பாக்கியம் சங்கர் எழுதிய பாடல்களை ஷிவானி பன்னீர்செல்வம், வாகு மசான், ரம்யா நம்பீசன், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, அனன்யா பட், பிரியா மாலி மற்றும் பத்மப்ரியா ராகவன் போன்ற திறமையான பாடகர்கள் பாடியுள்ளனர். மாடர்ன் லவ் சென்னை இசை ஆல்பத்தில் 14 பாடல்கள் மற்றும் 4 இசைக்கருவிகளின் ஒலித் தொகுப்புகளும் உள்ளன, அவை இப்போது அனைத்து முன்னணி இசை தளங்களிலும் கிடைக்கின்றன. அமேசான் ஒரிஜினல் தொடர் மே 18 அன்று இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் திரையிடப்படும். ...

இளையராஜா – யுவன் ஷங்கர் ராஜா முதல் முறையாக இணைந்து இசையமைக்கும் படம்!

News
  இயக்குநர் வெங்கட்பிரபு- நடிகர் நாகசைதன்யா இருவரும் புதிய படத்திற்காக இணைய இருக்கிறார்கள் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு  நிலவி வருகிறது. ’NC22’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம் நடிகர் நாகசைதன்யாவின் முதல் தமிழ்-தெலுங்கு பைலிங்குவல். அதேபோல, இயக்குநர் வெங்கட்பிரபுவுக்கும் தெலுங்கில் இயக்குநராக இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் படத்தின் பூஜையின் போது படத்தின் கதாநாயகி மற்றும் இசையமைப்பாளர் யார் என்பதும் தெரிவிக்கப்பட்டது. தற்போது இளைஞர்களுக்கு பிடித்த கதாநாயகியாக வலம் வரக்கூடிய கீர்த்தி ஷெட்டி, இந்தப் படத்தில் நாகசைதன்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறார். ’மாஸ்ட்ரோ’ இசைஞானி இளையராஜா மற்றும் ‘லிட்டில் மாஸ்ட்ரோ’ யுவன் ஷங்கர் ராஜா இருவரும் முதல் முறையாக இணைந்து இந்தப் படத்திற்கு இசையமைக்கின்றனர். இவர்கள் இருவர...