
விக்ரம் சுகுமாரன் இயக்கும் ராவண கோட்டம்
"மெதுவாக மற்றும் உறுதியாக இருப்பவர்கள் வெற்றி பெறுவர்" என்ற கோட்பாடு உண்டு. ஒரு சிலர் அதை "தேர்வு செய்வது தொடர்ச்சியாக வெற்றியை கொடுக்கும்" என மறு உருவாக்கம் செய்கிறார்கள். தனித்துவமான கதைகள் மற்றும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆனந்தி சினிமாவில் ஒரு சிறப்பான இடத்தை பிடித்திருக்கிறார். ஒரு நடிகரை மிகப்பெரிய அளவில் கொண்டு சேர்க்கும் திரைப்படங்கள் அவர்கள் பெயரின் முன்னால் சேர்ந்து கொள்ளும். ஆனால் ஆனந்தி அதில் ஒரு விதிவிலக்கு. 'கயல்' படத்தில் மிகவும் எளிமையான மற்றும் அன்பான கதாபாத்திரத்திலும், 'பரியேறும் பெருமாள்' படத்தில் மிகவும் அப்பாவியான பெண்ணாகவும் நடித்த அவர் தற்போது சாந்தனு பாக்யராஜின் ராவண கோட்டம் படத்தில் ஒரு உறுதியான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
"நான் இதை ஒரு கொள்கை என சொல்ல மாட்டேன், ஆனால் சரியான ஸ்கிரிப்டை தேர்ந்தெடுப்பது தான், என்னை போன்ற ஒரு கலைஞரை சினிமாவில்...