Tag: Indhuja
குழந்தைகளுடன் தீபாவளி கொண்டாடிய நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி!
“உதவும் உள்ளங்கள்” என்ற தொண்டமைப்பு வருடந்தோறும் பல்வேறு அமைப்புகளில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு ஒன்று திரட்டி அவர்களுக்காக “ஆனந்த தீபாவளி” என்று நிகழ்வை நடத்தி வருகின்றனர். இந்த வருடம் சுமார் 1222 குழந்தைகள் “ஆனந்த தீபாவளி” நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இன்று நடந்த இந்நிகழ்வில் நடிகைகள் இந்துஜா, அதுல்யா ரவி கலந்து கொண்டு குழந்தைகளுடன் இணைந்து தீபாவளி கொண்டாடினர்.
நிகழ்வில் நடிகை இந்துஜா பேசியபோது, “இந்த வருடம் தீபாவளி கொண்டாட்டமாக தளபதி விஜய் நடித்த பிகில் படம் திரைக்கு வருகிறது. இப்படம் நடிப்பதற்கு என்னை அணுகிய போது நான் எவ்வளவு சந்தோஷம் அடைந்தேனோ, அதே சந்தோஷம் உங்களை இன்று சந்தித்தபோது அடைந்தேன். மேலும் இந்த அமைப்பின் நிறுவனர் திரு. சங்கர் மகாதேவன், மற்றும் இந்த அமைப்பின் நலம் விரும்பி திருமதி. கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என்றார்.
நிகழ்வில் ந...
லட்சக்கணக்கில் லைக் குவித்த சூப்பர் டூப்பர் படப்பாடல்!
இணையவெளியில் பதிவேற்றிய சில நிமிடங்களில் லட்சங்களைத் தொட்டிருக்கிறது 'சூப்பர் டூப்பர்' படத்தின் ' ஜில் ஜில் ராணி ' என்கிற பாடல்.
துருவா , இந்துஜா நடிப்பில் ஃப்ளக்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பில், ஏ.கே இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'சூப்பர் டூப்பர்'. முழுநீள கமர்சியல் பேக்கேஜ் ஆக உருவாகியிருக்கிறது இப்படம் .
வணிகப் பரப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தப்படத்தில் இடம்பெறும் ஜில் ஜில் ராணி என்ற பாடலை இணைய வெளியில் உலவ விட்ட சில நிமிடங்களில் லட்சத்தைத் தாண்டி இரண்டாவது லட்சம் அடுத்தடுத்த லட்சம் என்று எகிறுகிறது.
சினிமா என்பது கலாபூர்வ வடிவம் என்பது ஒரு பக்கம் . சினிமா என்பது கொண்டாட்ட வடிவம் என்பது இன்னொரு பக்கம் .கவலைகள் போக்கும் கொண்டாட்டமே சினிமா என்கிற வகையில் உருவாகியிருக்கும் முழுநீள வணிகப் படம்தான் 'சூப்பர் டூப்பர்' எனவே தான் இந்த பாடல் காட்சிக்கு இப்படி ஒரு வரவேற்பு கிட...
விஜய் ஆண்டனி நடிக்கும் “காக்கி” படத்தின் உரிமைகளை கைப்பற்றிய இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ்
இயக்குனர் விஜய் மில்டன் - விஜய் ஆண்டனி கூட்டணியில் புதிய திரைப்படத்தைத் தயாரித்து வரும் இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ், அனுபவம் வாயந்த இயக்குனர்
ஏ. செந்தில்குமார் இயக்கத்தில், விஜய் ஆண்டனி நடிப்பில், உருவாகி வரும் "காக்கி" திரைப்படத்தின் உரிமைகளை வாங்கியிருக்கிறது.
விஜய் ஆன்டனி, சத்யராஜ், ஸ்ரீகாந்த், இந்துஜா, ஈஸ்வரி ராவ், ஜான் விஜய், ரவி மரியா சன் டீவி புகழ்'கதிர்,ஆகியோரை முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் "காக்கி", ஒரு பன்முகத் திறமைகள் கொண்ட பல நட்சத்திரக் கலவை.
ஜீன் மாதத்தில் துவங்கி ஏறத்தாழ 50 சதவீத படப்பிடிப்பு வேலைகள் ஷிமோகா , பெங்களூரு, சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்ற முதற்கட்ட படப்பிடிப்பில் நிறைவடைந்திருக்கிறது.
இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வேலைகள் அக்டோபர் மாதத்தில் நிறைவு பெறும் என் எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் ஏ.செந்தில் குமார் இயக்கத்தில், பிரபலமான ஒளிப்பதிவாளர்...







