இன்ஸ்டா இன்ஸ்டாகிராம் ஆல்பம் வெளியீடு!
Mudaliar Brother’s Film தயாரிப்பில், உலகின் முன்னணி இசை நிறுவனமான Sony Music நிறுவனம் வழங்கும், நக்ஷா சரண் குரல் மற்றும் நடிப்பில், சாண்டி மாஸ்டர் நடன அமைப்பில், லியோ இசையில், கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள ஆல்பம் பாடல் “இன்ஸ்டா இன்ஸ்டாகிராம்”. நவீன தலைமுறையின் இணைய உலகின் பரபரப்பை அவர்களின் உலகை சொல்லும் டிரெண்டிங் பாடலாக இப்பாடல் உருவாகியுள்ளது. இப்பாடல் வெளியீட்டு விழா இன்று ஆல்பம் குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில்
தயாரிப்பாளர் மதுசரண் பேசியதாவது…
எங்களை வாழ்த்த வந்துள்ள நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் நன்றி. M3 Mudaliyar Brother’s Film உடைய முதல் தயாரிப்பு. எங்கள் மகளுக்காக இதனை ஆரம்பிக்கவில்லை, நல்ல தயாரிப்புகளை உருவாக்க வேண்டுமென ஆரம்பித்துள்ளேன், நல்ல புராஜக்ட்களை பார்த்து கொண்டிருக்கிறோம். விரைவில் நல்ல படைப்புகளை தயார...
