நந்திதா ஸ்வேதாவின் அதிரடிப் படமான IPC 376 படப்பிடிப்பு நிறைவு!
அதிரடி ஆக்ஷன் படங்களில் கதாநாயகிகள் கெத்து காட்டுவது இப்போது ட்ரெண்ட். மேலும் பெண்களை மையப்படுத்திய கதைகள் தமிழ்சினிமாவில் இப்போது அதிகமாக வரத்துவங்கியுள்ளது. சஸ்பென்ஸ் ஹாரர் என நிறைய படங்கள் பெண்களை மையப்பாத்திரங்களாக கொண்டு வெளியாகி வெற்றிபெற்றும் வருகின்றன. இது தமிழ்சினிமாவில் நல்ல தருணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தத்தருணத்தில் நந்திதா ஸ்வேதா நடிப்பில் IPC 376 என்ற ஆக்ஷன் ஹாரர் கலந்த மாஸ் கமர்சியல் படத்தில் நடித்துள்ளார். அட்டக்கத்தி படத்தில் இருந்தே தனது நடிப்பால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை ரசிகர்களிடையே பிடித்துள்ள நந்திதா ஸ்வேதா இதில் நாயகியாக நடித்துள்ளார். படத்தில் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக உள்ளதாம். நான்கு சண்டைக்காட்சிகள் உள்ள இப்படத்தில் பெரும்பாலும் டூப் இல்லாமலே துணிச்சலாக நடித்துள்ளார் நந்திதா ஸ்வேதா. சூப்பர் சூப்பராயன் அமைத்த சண்டைக்காட்சிகள் மிகச்சிறப்பாக வந்துள்ளதாக தகவல்...


