சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் சர்வதேச விற்பனை!
சிவகார்த்திகேயன் நடித்த டான் படத்தின் சர்வதேச உரிமையை ஐபிக்ஸ் எண்டர்டெயின்மெண்ட் வாங்கியுள்ளது, அனைத்து ஏரியாக்களும் விற்று தீர்ந்தன!
இந்தியப் படங்களின் வெளிநாட்டு விநியோகத்தில் முன்னணியில் உள்ள ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் எல்எல்சி யுஎஸ்ஏ, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் வெளியீட்டு உரிமையை இந்தியாவைத் தவிர உலகம் முழுவதற்கும் பெற்றுள்ளது.
அனைத்து ஏரியாக்களும் விற்றுத் தீர்ந்துவிட்டதாகவும், மே 13-ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகவுள்ள நிலையில், மே 12 அன்று இரவு சில பகுதிகளில் சிறப்பு காட்சிகள் இருக்கும் என்றும் ஐபிக்ஸ் எண்டர்டெயின்மென்ட் அறிவித்துள்ளது.
பிரைம் மீடியா (அமெரிக்கா), யார்க் சினிமா (கனடா), பொலேய்ன் சினிமாஸ் (யுகே மற்றும் ஐரோப்பா), யுனைடெட் இந்தியா எக்ஸ்போர்ட்ஸ் (வளைகுடா, சிங்கப்பூர் மற்றும் இலங்கை), எம்கேஎஸ் டாக்கீஸ் (ஆஸ்திரேலியா ம...
