இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’
பத்திரிகை ஊடக நண்பர்களுக்கு பார்த்திபனின் பணிவான வணக்கம் !
இந்த நண்பர்களுக்கு என்று சொல்வதில் ஒரு ஸ்பெஷல் அர்த்தம் இருக்கிறது, வெறும் பத்திரிகையாளர்களாக, ஊட்கவியலாளர்களாக இல்லாமல், எப்போதும் எனக்கு நண்பர்களாகவே நீங்கள் இருக்கிறீர்கள். உடுக்கை இழந்தவன் கை போல் ஆங்கே இடுக்கண் கலைவதாம் நட்பு எனும் குறளுக்கேற்ப, என் தோல்விப்படங்கள் என்னுடைய வெற்றிப்படங்களை கணக்கிட்டால் வர்த்தக ரீதியாக எனது தோல்விப்படங்களே அதிகமாக இருக்கும் ஆனால் அதிலும் நான் ஏதாவது குடைக்குள் மழை போல், சிறிய அளவிலாவது புதிய முயற்சிகளை செய்திருப்பேன். ஒத்தையடி பாதியிலிருந்து ஒத்த செருப்பு வரை என்னுடைய பயணத்தை மிக இலகுவான நெடுஞ்சாலை பயணமாக்கியதில் பத்திரிகையாளர்களின் பங்கே அதிகம். துவண்டு கிடக்கும் போது, தோல்வியில் இருக்கும் போது தோள் கொடுப்பவர்களை தான், நாம் நண்பர்கள் என்று சொல்வோம். அந்த வகையில் என்னைப் பற்றி தொடர்ந்து ஒரு ...
