Wednesday, October 28

Tag: isari ganesh donation

திருமண மண்டப கட்டுமான செலவுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய ஐசரி கணேஷ்

திருமண மண்டப கட்டுமான செலவுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கிய ஐசரி கணேஷ்

News
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தென்னிந்திய நடிகர் சங்க சாரிட்டபிள் அறக்கட்டளையின் அறங்காவலருமான திரு.ஐசரி கணேஷ் அவர்கள் நடிகர் சங்கத்தின் 62ம் ஆண்டு பொதுக்குழுவில் அறிவித்து ஒப்புதல் பெற்றதின் அடிப்படையில் நடிகர் சங்க இடத்தில் புதிதாக கட்டி கொண்டிருக்கும் கட்டிடத்தில் உள்ள சிறிய (Mini) திருமண மண்டபத்திற்கு அவரது தந்தையான திரு.ஐசரி வேலன் அவர்கள் பெயரை வைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. மேலும் அதற்கான கட்டுமான செலவுத்தொகை அனைத்திற்கும் அவரே ஏற்றுக்கொள்வதாக ஒப்புக்கொண்டார். எனவே அதனடிப்படையில் முதற்கட்டமாக ரூ.1,00,00,000/- (ரூபாய் ஒரு கோடி மட்டும்) நடிகர் சங்கத் தலைவர் திரு.நாசர் அவர்கள் மற்றும் பொருளாளர் திரு.SI.கார்த்தி ஆகியோர்களிடம் திரு.ஐசரி கணேஷ் அவர்கள் வழங்கினார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பாக அவருக்கு நன்றி தெரிவிக்கப்படுகிறது....