Sunday, September 20

Tag: Ivana

‘எனக்கு திருப்தி தந்த படம் ‘ஹீரோ’” – யுவன் சங்கர் ராஜா!

‘எனக்கு திருப்தி தந்த படம் ‘ஹீரோ’” – யுவன் சங்கர் ராஜா!

News
“ஹீரோ” படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை பற்றி பேசும்போது  படக்குழு மொத்தமும் திவீர ரசிக மனப்பான்மைக்கு போய்விடுகின்றனர். அனைவருமே அவரின் இசைக்கு மயங்கி அவரது பின்னணி இசையையும், பாடல்களையும் வானளாவ புகழ்கின்றனர். ஆனால் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவோ இதற்கு நேர்மாறாக கூறுகிறார். எனது இசை படத்திற்கு மிகப்பெரும் பலமென மொத்த படக்குழுவும் கூறுகிறார்கள் ஆனால் அது முற்றிலும் உண்மையில்லை. படம் உருவாகி வந்திருக்கும் விதத்தை கண்டு நான் பிரமித்துபோய்விட்டேன். படத்தின் ஒவ்வொரு துளியிலும், பங்கேற்றிருக்கும் அத்தனை உறுப்பினர்களும், தங்கள் உடலாலும் ஆத்மாவாலும் முழு உழைப்பை தந்து ஒரு மிகப்பெரும் அதிசயத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். என்னிடம் கதை சொன்னபோது இருந்ததை விட இப்போது மிகப்பிரமாண்டமான முறையில் இப்படைப்பை உருவாக்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் எனக்கு வேறு வழியே இல்லை நான் எனது மிகச்...