சர்வதேச விருது பெற்ற ‘இயல்’ குறும்படம்!
அறிமுக இயக்குநர் அரவிந்த் குமரன் இயக்கியுள்ள ‘இயல்’ குறும்படத்துக்கு சர்வதேச விருது!
தமிழ் சினிமாவில் இப்போது பிரபலமாக இருக்கும் பல இயக்குநர்களுக்கு முகவரி கொடுத்தது குறும்படங்கள்தான். அந்த வரிசையில் ‘இயல்’ குறும்படத்தின் மூலம் திரைத்துறையின் பார்வையை தன் பக்கம் விழச் செய்துள்ளார் இயக்குநர் அரவிந்த் குமரன்.
இந்த குறும்படத்தில் நாயகனாக அதுல் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் ‘நிழல்கள்’ ரவி, பிரதீப் கே.விஜயன், மணிமேகலை நடித்துள்ளார்கள்.
பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் ஜயத் தன்வீர் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரோஷன் விஷால் இசையமைத்துள்ளார். சண்டை காட்சியை பில்லா ஜெகன் வடிவமைத்துள்ளார். தியேட்டரில் வெளியிடுமளவுக்கு பிரம்மாண்டமாக இந்த குறும் படத்தை ஏ.கே.பிலிம் புரொடக்ஷன் சார்பாக ஆர்.குமரன், கே.சுமதி தயாரித்துள்ளனர்.
இந்த உலகத்தில் சாதாரண மனிதர்கள் தான் சாதனையாளர்களாக ஆகின்றனர் என்பது இந்த குற...
