Friday, October 23

Tag: JAI BHIM

‘ஜெய் பீம்’ வெற்றியில் ஒளிரும் ஆறு நட்சத்திர முகங்கள்!

‘ஜெய் பீம்’ வெற்றியில் ஒளிரும் ஆறு நட்சத்திர முகங்கள்!

News
ஜெய் பீம் திரைப்படத்தை அற்புதமான சமூக நாடகமாக மாற்றிய நட்சத்திர கலைஞர்களைப் பற்றி மக்கள் அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். அமேசான் பிரைம் வீடியோ தளத்தில் அண்மையில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்த திரைப்படம் சூர்யாவின் 'ஜெய் பீம்'. ஜெய் பீம் திரைப்படத்தை பார்வையிட்ட பார்வையாளர்கள், ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைத்து தரப்பினரையும் கவர்ந்திருக்கிறது. தீபாவளி வார இறுதியில் டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட்ட ஜெய் பீம் ஏகோபித்த விமர்சனங்களை பெற்று, 'இந்த ஆண்டில் வெளியான சிறந்த சமூக நாடகங்களில் ஒன்று' என்ற அடையாளத்தையும், அங்கீகாரத்தையும் பெற்றிருக்கிறது. இந்த படைப்பில் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் திரையில் தங்களுடைய அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவர்களைப் பற்றி அனைத்து தரப்பினரும் அறிந்து கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள். 'செங்கேணி' ஆக நடித்த நடிகை லிஜோமோள் ஜோஸ்.. 'மகே...
‘ஜெய்பீம்’ படத்தை உச்சிமுகரும் ஒட்டுமொத்த இந்தியா!

‘ஜெய்பீம்’ படத்தை உச்சிமுகரும் ஒட்டுமொத்த இந்தியா!

News
‘ஜெய்பீம்’ஒரு உன்னதமான படைப்பு...உச்சிமுகரும் ஒட்டுமொத்த இந்தியா!   இதயங்களை தொடர்ந்து வென்றெடுக்கும் 'ஜெய் பீம்'   இந்திய திரை உலகினரின் பாராட்டு மழையில் நனையும் 'ஜெய் பீம்' நடிகர் சூர்யா தயாரித்து நடித்திருக்கும் 'ஜெய் பீம்' படத்திற்கு இந்திய திரை உலகை சார்ந்த ஏராளமான முன்னணி பிரபலங்கள் தங்களது வாழ்த்துகளை தொடர்ந்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி திருநாளன்று பட்டாசுகளின் சத்தத்தை விட, சூர்யா நடிப்பில் வெளியான 'ஜெய் பீம்' படத்தை பார்வையிட்ட ரசிகர்களின் கரவொலியின் சத்தம் தான் அதிகம். நவம்பர் 2ஆம் தேதியன்று அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் ‘ஜெய் பீம்’ வெளியானது. இதனை கண்டு ரசித்த பிரபலங்கள், ரசிகர்கள், விமர்சகர்கள், பார்வையாளர்கள் என அனைத்து தரப்பினரும் இந்த நீதிமன்றத்தை மையப்ப...
” ‘ஜெய்பீம்’ போன்ற நல்ல படங்களை வழங்குவதே ரசிகர்களுக்கு நான் செய்யும் கைமாறு”: சூர்யா நெகிழ்ச்சி!

” ‘ஜெய்பீம்’ போன்ற நல்ல படங்களை வழங்குவதே ரசிகர்களுக்கு நான் செய்யும் கைமாறு”: சூர்யா நெகிழ்ச்சி!

News
” ‘ஜெய்பீம்’ போன்ற நல்ல படங்களை வழங்குவதே ரசிகர்களுக்கு நான் செய்யும் கைமாறு”: சூர்யா நெகிழ்ச்சி! ஒவ்வொரு முறை சூர்யாவின் படம் திரைக்கு வரும்போதும் அவர், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடுகிறார். இப்போது இந்த தீபாவளிக்கு 'ஜெய் பீம்' திரைப்படம் சூர்யா நடிப்பில் வெளியாகவிருக்கிறது. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த நீதிமன்ற திரைப்படம் வெளியாக இன்னும் நான்கே நாட்கள் தான் உள்ளன. நவம்பர் 2 ஆம் தேதி உலகளவில் 240 நாடுகளில் பல்வேறு இடங்களிலும் அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகிறது. சூர்யா மீண்டும் லட்சோப லட்ச மக்களின் இதயங்களைக் கொள்ளையடிக்கத் தயாராகிவிட்டார். 20 ஆண்டுகளாக பல்வேறு கதாபாத்திரங்களில் தனது பலே நடிப்பால் ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கும் சூர்யா, அந்த ரசிகர்கள் கொட்டும் அன்பிற்கு இன்னுமொருமுறை ‘ஜெய்பீம்’ பதிலளிக்கத் தயாராக உள்ளார். 'ஜெய் பீம்' திரைப்...
ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்தது ஏன்? சூர்யா சொல்லும் சுவாரஸ்ய விளக்கம்!

ஜெய் பீம் படத்தில் வழக்கறிஞராக நடித்தது ஏன்? சூர்யா சொல்லும் சுவாரஸ்ய விளக்கம்!

News
ஜெய் பீம் திரைப்படம் தீபாவளி வெளியீடாக வரும் நவம்பர் 2ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவிருக்கிறது. ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தில் தான் ஏன் முதன்முறையாக ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்தேன் என்பதை சூர்யா விளக்கியுள்ளார். சூர்யா தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கியதில் இருந்தே, ரசிகர்களை வியக்கவைக்கத் தவறியதில்லை. தான் ஏற்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் சிறப்பாக நியாயம் செய்வார். அது ஒரு காவலர் பாத்திரமாக இருந்தாலும் சரி ஒரு தொழிலதிபர் பாத்திரமாக இருந்தாலும் சரி. இல்லை அடுத்த வீட்டு பையன் போல் ஒரு ஹீரோவாக இருந்தாலும் சரி. ஜெய் பீம் திரைப்படத்தில் முதன்முறையாக வழக்கறிஞராக நடிக்கிறார். வழக்கறிஞர் சந்துரு அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கும் துணிச்சல்மிக்கவர். இந்தக் கதாபாத்...
ஜெய் பீம் திரைப்படத்தின் ‘பவர்’ பாடல் வெளியானது!

ஜெய் பீம் திரைப்படத்தின் ‘பவர்’ பாடல் வெளியானது!

News
சூர்யா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தின் முதல் பாடல், ‘பவர்’ வெளியாகியுள்ளது! அறிவு எழுதிப் பாடியுள்ள இந்தப் பவர் பாடலை, ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் தா செ ஞானவேல் எழுதி இயக்கியிருக்கும் ஜெய் பீம் திரைப்படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியின் 2டி எண்டெர்டெய்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. . உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கும் ப்ரைம் சந்தாதாரர்கள், தீபாவளியை முன்னிட்டு, 2 நவம்பர் 2021 அன்று ஜெய் பீம் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வீடியோவில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டீஸர் வெளியீட்டுக்குப் பிறகு ரசிகர்களிடம் சரியான ஆர்வத்தை உருவாக்கியிருக்கும் நீதிமன்ற வழக்காடலை களமாகக் கொண்ட ஜெய் பீம் திரைப்படத்தைச் சுற்றி அற்புதமான ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தங்களுக்குப் பிடித்தமான சூப்பர்ஸ்டார் சூர்யாவையும் அவரது அட்ட...