தலைநகரம் 2’ மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகும் பிரபல மலையாள நடிகர் ஜெய்ஸி ஜோஸ்! Jaise Jose
'தலைநகரம் 2’ மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகும் பிரபல மலையாள நடிகர் ஜெய்ஸி ஜோஸ்! Jaise Jose
முதல் படத்திலேயே மூன்று கெட்டப்புகள்! - ‘தலைநகரம் 2’ மூலம் கோலிவுட்டில் கால் பதித்த பிரபல மலையாள நடிகர் ஜெய்ஸி ஜோஸ்
லால், நெடுமுடி வேணு, மனோஜ் கே.ஜெயன், திலகன், சுரேஷ் கோபி, கலாபவன் மணி, ராஜன் பி.தேவ் உள்ளிட்ட பல மலையாள நடிகர்கள் தமிழ் சினிமாவில் பல முக்கிய படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து தங்களுக்கு என்று தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கி இருக்கிறார்கள். இவர்களின் வரிசையில், மேலும் ஒரு பிரபல மலையாள குணச்சித்திர நடிகர் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.
2013 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘திரி டாட்ஸ்’ (3 Dots) படத்தின் மூலம் மலையாள திரையுலகில் நடிகராக அறிமுகமான ஜெய்ஸி ஜோஸ், தொடர்ந்து பல படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து மலையாள சினிமா...
