கேப்மாரி படம் குறித்து அரசாங்கம் ஆலோசிக்குமா?
நாளை 13ஆம் தேதி வெளியாகும் தமிழ்படங்களின் பட்டியலில் எஸ்.ஏ.சந்திரசேகரின் கேப்மாரி படமும் வெளியாவதாக விளம்பரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசாங்கம் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து விருது தருவதுபோல் 'கேப்மாரி' மாதிரி படங்களை எடுக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர் மாதிரியான ஆட்களுக்கு குறைந்த பட்சம் ஐந்து ஆறு ஆண்டுகளுக்காவது சிறை தண்டனை கொடுத்தால் என்ன என்பதை சீரியசாக யோசிக்க வேண்டும்.
இரண்டு நாட்களுக்கு முன் 'கேப்மா' படம் பார்த்த பிறகு மனதில் தோன்றிய எண்ணம் இது. விரிவான விமர்சனம் நாளை இரவு நியு சினிமா எக்ஸ்பிரஸ்.டாட் காம் இணையதளத்தில் நாளை இரவு வெளியாகும்...
