“ஜித்தன் ரமேஷ் என்கிற நடிகருக்காகவே உருவாக்கப்பட்ட கதைதான் ரூட் நம்பர் 17″_ இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன்!
“ஜித்தன் ரமேஷ் நல்ல ரூட்டில் தான் போய்க் கொண்டிருக்கிறார் ; சுரேஷ் சக்கரவர்த்தி பாராட்டு!
*"ஜித்தன் ரமேஷ் என்கிற நடிகருக்காகவே உருவாக்கப்பட்ட கதை தான் ரூட் நம்பர் 17" ; இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன்*
*"இத்தனை வருடங்களாக தமிழில் இசையமைக்காதது ஏன் ?" ; ரூட் நம்பர் 17 விழாவில் மனம் திறந்த மலையாள இசையமைப்பாளர் அவுசப்பச்சன்*
நேனி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார்.
ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் உள...


