Friday, October 23

Tag: Johny master

ஜானி மாஸ்டர் நாயகனாக நடிக்கும் ‘ரன்னர்’

ஜானி மாஸ்டர் நாயகனாக நடிக்கும் ‘ரன்னர்’

News
ஜானி மாஸ்டர் கதாநாயகனாக நடிக்கும் காப் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான 'ரன்னர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது! நடன இயக்குநர் ஜானி மாஸ்டரின் திறமை தலைமுறை தாண்டிய சினிமா ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அவர் கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் குறிப்பாக தெலுங்கில் பல சார்ட்பஸ்டர் பாடல்களுக்கு நடனம் அமைத்துள்ளார். அவரது நடனம் பல நட்சத்திர கதாநாயகர்களையும் கவர்ந்துள்ளது. இவர் தற்போது 'ரன்னர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். விஜய் டமருகா ஆர்ட்ஸ் சார்பில் விஜய் பாஸ்கர், ஜி.பனிந்திரா மற்றும் எம்.ஸ்ரீஹரி ஆகியோர் இப்படத்தை தயாரிக்கின்றனர். இதற்கு முன் 'அரவிந்த் 2' படத்தை தயாரித்துள்ளனர். அறிமுக இயக்குநர் விஜய் சௌத்ரி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஜானி மாஸ்டரின் பிறந்தநாளை முன்னிட்டு, ஆக்‌ஷன் டிராமாவாகமாக உருவாகி வரும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ...