தமிழகத்தையே உலுக்கிய ஜீவஜோதி வாழ்க்கை திரைப்படமாகத் தயாராகிறது!
இந்திய சினிமாவில், பல வித்தியாசமான களங்களில் முன்னோடி படங்களான Badhaai Ho, Bareilly Ki Barfi, Talvar மற்றும் Raazi, போன்ற தீவிரமான படைப்புகளை தந்த Junglee Pictures நிறுவனம், உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு மீண்டும் ஒரு அற்புதமான படைப்பை வழங்கவுள்ளது.
Junglee Pictures நிறுவனம் திருமதி ஜீவஜோதி சாந்தகுமாரின் வாழ்க்கை கதையை அனைத்து மொழிகளிலும் திரைப்படமாக எடுப்பதற்கான உரிமையை பெற்றுள்ளது. தமிழகத்தில் தொடர் உணவக நிறுவனங்களை நிறுவி, கொடி கட்டி பறந்த P.ராஜகோபால் V. மீது தேசமே அதிர்ச்சியுறும் வகையிலான குற்றங்களை சுமத்திய, ஜீவஜோதியின் வாழ்வில் நடந்த சம்பவங்களை, அது குறித்த வீடியோ, ஆடியோ, உண்மை செய்திகள், அனைத்தையும் ஒருங்கிணைத்து ஒரு திரைக்கதையாக மாற்றும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது.
இத்திரைப்படம் வாழ்வின் அடிமட்டத்திலிருந்து, வானளவு புகழுக்கு உயர்ந்த தொழிலதிபர், உணவின் சுவையை உல...
