Wednesday, September 2

Tag: ‘K 13’

கோடை விடுமுறையில் வெளியாகிறது K13

கோடை விடுமுறையில் வெளியாகிறது K13

News
நல்ல கதையம்சம் உள்ள படங்கள் தான் வெற்றி பெறும் என்ற கோட்பாடு சில நேரங்களில் மறைந்து போவதை போல தோன்றலாம். ஆனால் அது நல்ல திறமையான இயக்குனர்கள் மிகச்சிறந்த, புதுமையான கதைகளுடன் வரும்போது மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது. தற்போது இயக்குனர் பரத் நீலகண்டன் K13 மூலம் மீண்டும் அதை நிரூபித்திருக்கிறார். படத்தின் டீசர் அனைவரின் எதிர்பார்ப்புகளையும் அதிகமாக்கி இருக்கிறது. எற்கனவே தணிக்கை செய்யப்பட்ட இந்த திரைப்படத்தின் இசை மிக விரைவில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர் தயாரிப்பாளர்கள்.   SP சினிமாஸ் தயாரிப்பாளர் எஸ்.பி. ஷங்கர் இது குறித்து கூறும்போது, "டீசரில் ரசிகர்கள் பார்த்தது மிகவும் சாதாரண விஷயங்கள் தான். படத்தில் ரசிகர்களுக்கு இன்னும் அதிகமான ஆச்சர்யங்களும், எதிர்பாராத திருப்பங்களும் இருக்கும். இந்த டிரெய்லர் உளவியல் ரீதியாக ரசி...
கே 13 படத்தில் நடிக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்!

கே 13 படத்தில் நடிக்கும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்!

News
ஒரு சில படங்களில், முன்னணி கதாபாத்திரங்களுக்கு இணையாக மிக வலுவாக நிற்கும் ஒரு சில கதாபாத்திரங்கள் இருக்கும். இத்தகைய கதாபாத்திரங்கள் பெரும்பாலும் 'திரில்லர்' வகை படங்களில் அமையும். அந்த கதாபாத்திரங்கள் தான் விறுவிறுப்பாக படத்தை கொண்டு செல்ல தூண்டுதலாக அமையும். அந்த வகையில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்க, பரத் நீலகண்டன் இயக்கும் 'கே13' படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்.   இது குறித்து இயக்குனர் பரத் நீலகண்டன் கூறும்போது, "ஸ்கிரிப்ட்டை முடித்தவுடன், இந்த குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க ஒரு நல்ல நடிகரை தேடிக்கொண்டிருந்தேன். இந்த படத்தில் முழு திரில்லர் விஷயங்களையும் இந்த கதாப்பாத்திரம் தான் தூண்டுகிறது. தனிப்பட்ட முறையில், ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவராக இருப்பார் என நான் உணர்ந்தேன். அவரிடம் இணை இயக்குனர்களாக...
அருள்நிதி நடிக்கும்  ‘K13’

அருள்நிதி நடிக்கும் ‘K13’

News
ஒரு நடிகரின் பெயர் ஏதாவது தலைப்புடன் தொடர்புபடுத்தி அழைக்கப்படுமானால், அருள்நிதி 'கதைகளின்' நாயகன் என்று அழைக்கப்படும் அளவுக்கு ஒரு கணிசமான பெயரை பெற்றிருக்கிறார். தனித்துவமான கதாபாத்திரங்கள் மற்றும் ஸ்கிரிப்ட்களில் நடிக்கும் அவரது ஆர்வம் அனைத்து தரப்பு ரசிகர்களிடையே அவருக்கு ஒரு மிகப்பெரிய மரியாதையை உருவாக்கியுள்ளது. நிச்சயமாக, அவரது அடுத்த படமான 'K13' படமும் அருள்நிதியின் இன்னொரு முயற்சியை எடுத்துக் காட்டுகிறது. படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே நல்ல எதிர்பார்ப்புகளை பார்வையாளர்களிடையே உருவாக்கியிருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இப்போது வெளியாகியுள்ள மோஷன் போஸ்டர் உடனடியாக அனைவரையும் கவர்ந்து, எதிர்பார்ப்புகளை மேலும் அதிகமாக்கியிருக்கிறது.   அருள்நிதியின் திரை பிரசன்னத்திற்கு சமமாக, 'வீடு' ஒன்றும் மோஷன் போஸ்டரில் தொடர்ச்சியாக பதிவாகியுள்ளது, இதற்கு முன்னர் வந்த போஸ்டர்களிலும் அது நிகழ...