கே.பாலசந்தர் 5ஆம் ஆண்டு நினைவு நாளில் கே.பாலசந்தர் ரசிகர் மன்றம் துவக்கம்!
மறைந்த இயக்குநர் கே.பாலச்சந்தர் பெயரில் 'கே.பாலச்சந்தர் ரசிகர்கள் சங்கம்' உருவாக முக்கிய காரணம் 'கவிதாலயா' பாபு மற்றும் 'கவிதாலயா' பழனிசாமி இருவரும் தான். அதற்கான தொடக்க விழாவில் கே.பாலச்சந்தரைப் பற்றி சினிமா பிரபலங்கள் பேசியதாவது:-
நடிகர் சிவகுமார் பேசியதாவது,
இயக்குநர் கே.பாலசந்தரின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத மூன்று பேர் நாகேஷ், ரஜினி மற்றும் கமல். ‘மூன்று முடிச்சு’ படத்திற்காக விருந்தினர் கதாபாத்திரத்திற்காக என்னை அணுகியபோது நான் நடிக்க மறுத்துவிட்டேன். ஆனால், மூன்று முடிச்சு படத்தில் ரஜினி நடிக்கும்போது நீ கறுப்பாக இருக்கிறாய் என்று வருந்தாதே நீ கருப்பு வைரம் தமிழ்நாட்டையே கலக்கப் போகிறாய் என்று அன்றைக்கே கூறியவர். அதேபோல், இயக்குநர் பாலசந்தரின் தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டியர் நடிகர் ரஜினிகாந்த்.
‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் என் கதாபாத்திரத்தை அன...
